உறுதியான கால எல்லை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்

ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க அமைச்சரவை அனுமதித்துள்ளமையை வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் பாராட்டியுள்ளனர். எனினும் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்பம், மழை, வாகனப்புகை என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சுமார் 140 நாட்களாக நாம் போராட்டம் நடத்திவருகிறோம். நாம் வன்முறைகளில் ஈடுபடாமல் எமது தொழில் உரிமைக்காக போராடுகிறோம்.

வட மாகாணத்தில் உள்ள 3500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க கோரி கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி நாம் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

அமைச்சரவை அங்கீகாரம் எமக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனினும் வாய்ப்பை வழங்குவதற்கான கால அளவ இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அத்தோடு வடக்கு கிழக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலும் இதுவரை வௌியிடப்படாமையினால் என்ன செய்வது என்பது தொடர்பில் குழம்பிப் போயுள்ளோம் என்று வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435