அமைச்சர் வஜிர அபேவர்தனவின் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 18 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடுக்க ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.