உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம்

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (13) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் சேவையை நிறைவேற்றுவதற்கு தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை அரசாங்கம் என்ற ரீதியில் மதிப்பளிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். கொவிட்- 19 நெருக்கடியின் போதும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் திணைக்கள ஊழியர்களுக்கு கௌரவம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டீ.சந்தன தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் காமினி செனரத், தேசிய வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே, தேசிய வருவாய் திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய வருவாய் பொது சேவை சங்கத்தின் அதிகாரிகள் உட்பட குழுவினர் இணைந்திருந்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435