இலங்கை அரசு இதுவரை காலமும் செல்வந்தர்களின் அரசாக செயல்பட்டது. இதை முடிவுக்கு கொண்டு வந்து உழைப்பாளர்களின் உணர்வை புரிந்த அரசாக நாம் மாற்றி காட்டுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய கலாச்சாரம், சாகித்தியம் ஆகியவற்றை உரிமையாக கொண்டு செல்ல முடியாமல் அதிலிருந்து விடுப்பட்டவர்களாக 150 வருட காலமாக அவர்களை மாற்ற முடியாமல் சிக்கி தவிக்கும் நிலையை உருவாக்கிய அரசியலுக்கு அப்பால் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கலை, கலாச்சாரத்தை ஏனைய சமூகத்தினரை போன்ற உரிமைகளை கௌரவமாக வழங்கி பாதுகாக்கும் அரசாங்கத்தை நாம் உருவாக்கி காட்டுவோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.