மாற்றுத்திட்டத்திற்கு முயற்சிக்கும் தோட்டக் கம்பனிகள்

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கொடுப்பனவை வழங்காமல் தோட்டத் கம்பனிகள் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க முயல்கின்றனர் என்று முன்னணி சோஷலிச கட்சியில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ குற்றம்சாட்டியுள்ளார்.

ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நேற்று (29) காலை பத்து மணிக்கு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை கடந்த 2015.03.31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உடன்படிக்கை பேச்சுவார்தை இழுபறி நிலையில் இருந்தது.

இந் நிலையில் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக 2500ரூபாவை வழங்க அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

எனினும் தோட்ட கம்பனிகள் தட்டி கழிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளதுடன், மாற்று திட்டத்தை முன்வைக்க முனைகின்றனர். நாம் அதனை எதிர்கின்றோம்.

தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ள திகாம்பரம், தொண்டமான் போன்றோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர்.

தேயிலை மலையில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் கால்களில் அட்டை கடித்து இரத்தம் உறிஞ்சுவது போலவே மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்கின்றனர்.

200 வருட காலமாக இலங்கையில் வாழும் தோட்ட தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தை போல, சகல உரிமைகளும் உடையவர்களாக வாழவேண்டும். நாட் சாம்பளமாக 1000 ரூபாவும் காணி மற்றும் வீட்டுரிமையும் வழங்கபட வேண்டுமென தெரிவித்தார்.

எமது போரட்டமானது தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பிக்க உள்ளோம். ஆகவே இப் போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமுக அமைப்புகளும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

வேலைத்தளம்/ நன்றி- அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435