ஊரடங்குச் சட்டத்தை 24ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் 24ம் திகதி அதிகாலை 6.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்றைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.
ஏனைய மாவட்டங்களில் 23ம் திகதி காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.