ஊரடங்கு அமுலாக்கலும் அதிகரிக்கும் வீட்டு வன்முறைகளும்

கொவிட் 19 தொற்று இன்று எம்மனைவரையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டுள்ளது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த எமக்கு ஒரு ஓய்வை கொவிட் 19 கொடுத்துள்ளது. எமது குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை காப்பதற்கும் இது வாய்ப்பாய் அமைகிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாம் சுற்றுச்சூழல், எமது வீட்டுத் தோட்டம், ஆகாயம், பறவைகள் என பலவற்றை ரசிப்பதற்கும் இது சந்தர்ப்பமாக அமைந்தபோதிலும் சத்தமேயில்லாம் சில கண்ணீர் துளிகள் மண்ணை ஈரமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆம், நோய்த்தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் ஊரடங்குசட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கியுள்ள அதேநேரம் வீடுகளில் குடும்ப வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் வேகமாக அதிகரித்துள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

துஷ்பிரயோகம் செய்பவருடன் அடைக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளனர். உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் மட்டுப்படுததப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன என்கிறார் உளவள ஆலோசகர் நிவேந்திர உதுமான்.

வீட்டு வன்முறைகளுக்கு எதிரான தேசிய கூட்டணியின் அமெரிக்காவுக்கான தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான ரூத் க்லென் கருத்து வௌியிடுகையில், கொவிட் 19 தொற்றுடன் கூடிய இக்குறிப்பிட்ட காலவரையானது, வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக கொடுமையான காலப்பகுதியாக அமையும். துஷ்பிரயோகம் செய்பவர் பாதிக்கப்பட்டவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றமைய இதற்கு காரணம் என்கிறார் அவர்.

இந்நிலையானது சாதாரண நிலைக்கு அப்பாட்பட்டது. பாதிக்கப்படுகிறவர்கள் சிலவேளை, தொழிலுக்கும் பாடசாலைக்கும் செல்வதன் மூலமாக ஒரு சிறிது விடுதலை பெற்றவர்களாக இருந்திருக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காலப்பகுதில் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருவதாக தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சுட்டிக்காட்டுஇலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைகள் பயிற்சி மற்றும் வகைப்படுத்தல் குழுத்தலைவர் புஷ்பா ரம்யானி டி சொய்சா. 21 – 23 நோயாளர்களில் 15 பெண்கள் தாக்கப்பட்டமையினால் சிகிச்சைக்கு வருபவர்களாக இருக்கின்றனர்.

உலகில் பாலின அடிப்படையிலான வன்முறைகள்

இவ்வாறான வீட்டு வன்முறைகள் இலங்கையில் அல்லது வளர்முக நாடுகளில் மட்டுமா நிகழ்கிறது என்று பார்த்தால் இல்லையென்பதே உண்மை.

அனைத்திட சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்புக்கான அமைப்பு Protecting Environment and Children Everywhere – PEaCE , சிறுவர் உரிமை பாதுகாப்புக் குழுவான (ECPAT Sri Lanka), என்பன வௌியிட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை மேற்கோள்காட்டிய தரவுகளுக்கமைய, சிறுவர் துஷ்பிரயோக வீதம் 33 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கைக்கு மட்டுமான பிரச்சினை இல்லையென்கிறது மனித உரிமை அமைப்பான ஹியுமன் ரைட்ஸ் வொட்ச். இக்காலப்பகுதியில் சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது இவ்வமைப்பு.

பிரான்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால் வீட்டு வன்முறை மிக அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பெண் தனது துணை அல்லது முன்னாள் துணைவரால் கொலை செய்யப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 போன்ற நெருக்கடிகள் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்படும் பெண்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வாய்ப்பு அதிகம். பாதுகாப்பு இல்லம் போன்ற சேவைகளை பெற முடியாத இடங்களில் வீட்டு வன்முறைகளின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு தொடர்பான டி சொய்ஸாவின் கருத்து குறித்து தெரிவித்த ‘தேவை நாடும் மகளிர்’ திட்டத்தின் இணைப்பாளர் மற்றும் சட்ட உத்தியோகத்தரான சட்டத்தரணி மரியம் வடூட், அவர்களுக்கு தெரிவித்தமையினால் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூற முடியாது. ஏனைய சந்தர்ப்பங்களை விட தற்போது வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

எவ்வாறு இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல்கள் சரியான முறையில் சென்றடைய வே்ணடும். உறவினால் எந்தவொரு பெண்ணும் தமக்கு உதவுவதற்கான வளம் காணப்படுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் நாட்டில் எந்தவிடத்தில் இருந்தாலும் சரி. தேவை நாடும் மகளிர் திடத்தின் 6 அலுவலகங்களை 6 மாவட்டங்களில் திறந்து வைத்துள்ளது. இவ்வலுவலகங்கள் உரிய சேவையை வழங்குவதுடன் ரகசியம் பேணவும் தவறுவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன என்பதை நாட்டில் பல பாகங்களில் பணியாற்றும் எமது வலையமைப்பில் பணியாற்றும் நிபுணர்களால் நிரூபிக்க முடியவில்லை. வழமையான எண்ணிக்கை முறைப்பாடுகளே எமக்கு கிடைக்கின்றன. சிறுவர்களுக்கான உதவி கோரலும் இவ்வாறே உள்ளது. திடீரென அதிகரித்துள்ளது என்று எம்மால் கூற முடியாதுள்ளது என்கிறார் தேவை நாடும் மகளிர் திட்டத்தின் நிரந்தர உளவள துணையாளர் பத்மா சஹதுவ.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு உதவி நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் அவதானிக்கிறோம். சில குடும்பங்களில் தொடர்ந்தும் சண்டைகள் நடந்த வண்ணமிருக்கின்றன. எவ்வாறு இருப்பினும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் வீட்டு வன்முறைகள் மறைக்கப்பட்டாலும் கூட நாம் இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் இருக்கிறோம் என்று பொலிஸ் தலைமையகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் இயக்குநர் பிம்ஷானி ஜாஷின் ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உரிமைக்குழுக்கள் என்பவற்றால் உள்வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே சிதறிய வலையமைப்பாக இருந்து சூழ்நிலைக்கேற்ப உதவி வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

வன்முறைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் அல்லது ஆபத்தில் இருக்கும் ஒருவரைப் பற்றி நீங்கள் அறியும் சூழல் ஏற்படுமாயின் உதவிகளை பெற வழிகள் உள்ளன. சமூக நெருக்கடியின் போது பதிலளிக்கும் இலங்கை குழுவில் (CCRT-LK) ஷானுகி டி அல்விஸை தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினையை பகிர்ந்துகொண்டு ஆலோசனை பெற முடியும். உணர்வுரீதியான உதவிகள் உங்களுக்கு தேவைப்படுமாக இருந்தாலும் சரி, முறைப்பாடுகளாயிருந்தாலும் சரி, அவர்கள் உரிய அதிகாரிகளிம் உங்களை வழிப்படுத்துவார்கள்.

மேலதிகமாக உங்களுக்கான உதவிகளைப் பெற,

24 மணி ​நேர உடனடி தொடர்பு இலக்கங்கள் – 0114 718 585/0777 349 100
அநுராதபுரம் – 0777 349 103
யாழ்ப்பாணம் – 0779 044 202
பதுளை – 0772 083 319
மட்டக்களப்பு – 0774 338 965
மாத்தறை – 0713 481 650
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் – இலங்கை பொலிஸ் – 0112 444 444

நன்றி – இணையம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435