கொரோனா தொற்றை ஒழிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இடைக்கிடை தளர்த்த வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா ஆபத்து அதிகரிக்கின்றமையினால் தாம் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்று சங்கிலியை உடைப்பதற்கு சமூக இடைவௌி மிக முக்கியம். தற்போதைய சூழ்நிலையில் மக்கள் வீடுகளில் இருப்பதே நூறு வீத பாதுகாப்பு. அதுதான் கொரோனவை முற்றாக ஒழிக்கக்கூடிய சாதகமான வழியாகும். மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவது நூறு சதவீதம் அரசாங்கம உறுதிபடுத்தவேண்டும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.