நாட்டில் கொவிட் 19 குறைந்துள்ளதை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கொவிட் 19 தொற்று குறைவடைந்துள்ளமையினால் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த வேணடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து வௌியிட்டதையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமந்த ஆனந்த மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
ஏனைய நாடுகளை போன்று இலங்கையில் கொவிட் 19 தொற்று பரவவில்லை. உயிரழப்புகளும் குறைவு, தரமான மருத்துவம் உள்ளது, எனினும் அனைத்தையும் உடனடியாக கைவிடுவது ஆபத்தானது. ஏனைய நோய்களை போலன்றி அடுத்தடுத்த சுற்றுக்களில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்போதைய கடுமையான நடவடிக்கைகள் தொடரவேண்டும். குறிப்பாக ஊரடங்குசட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பது பாதுகாப்பானது.
அவ்வாறு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதாயின் ஏற்கனவே தொற்றுக்குள்ளானர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த வேண்டும். பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் சுமூகமாக நடமாட அனுமதியளிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.