ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரான தொழில்துறைசார் அறிவுறுத்தல்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.

அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.

தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும்.

பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும்.

அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435