ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

நாளை (09) காலை 5 மணிக்கு மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் ‎தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மட்டக்குளி , மோதர , வாழைத்தோட்டம் , ‎கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ‎‎,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ‎‎,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக ‎இருக்கும்.‎

மட்டக்குளியின் மெத்சந்த செவன ,மிஹிஜயசெவன , மோதரையின் ‎ரண்முத்து செவன ,கிராண்ட்பாஸின் முவதொர உயன ,தெமட்டகொடையின் ‎சிறிசந்த உயன , மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற ‎தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே ‎வரவோ அனுமதியில்லை

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை ,பேலியகொடை , கடவத்த ‎‎,ராகம, நீர்கொழும்பு , பமுனுகம , ஜா எல , சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் ‎தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.‎

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை , இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், ‎வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக ‎இருக்கும்.‎

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435