முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களுக்கமைய சுமார் 21702 பேர் தொழில்வாயப்பற்றுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புள்ளிவிபரக்கணிப்பின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 41465 குடும்பங்களைச் சேர்ந்த 21702 பேரே தொழில்வாய்ப்பற்றுள்ளனர்.
இவர்களில் 6753 பேர் க.பொ.த சாதாரண தர தகைமை பெற்றவர்கள். 3180 பேர் உயர்தர தகைமை பெற்றவர்கள். 199 பேர் பட்டதாரிகள் ஆவர். இவர்களைத் தவிர 11570 பேர் வேலைவாய்ப்பற்றுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலற்றோரின் எண்ணிக்கை 20,000 மாக உள்ளது என்று அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ வீரகேசரி