ஊழியர்கள் மீது நடவடிக்கை- லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சில வாரங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் செய்த லேக்ஹவுஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அந்நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பத்தாயிரம் சம்பள உயர்வு, லேக் ஹவுஸ் நிறுவனத்தை சுயாதீன பொதுச்சேவை ஊடக நிறுவனமாக மாற்றுதல், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு வழங்குதல் மற்றும் நிறுவனத்துக்கும் லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத் கடந்த 6ஆம் திகதி லேக்ஹவுஸ் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யபட்டதற்கான கடிதங்கள் ஊழியர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியேந்தி லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435