ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படவில்லை – தோட்ட மக்கள் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களாக தமக்கு பல வருட காலமாக ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படுவதில்லை என குற்றம் சுமத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் கண்டி கலஹா தோட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 வருடங்களாக பெருந்தோட்டங்களை கட்டிக்காத்து வரும் தமக்கு வீடுகளை அமைக்க 20 பேச்சஸ் காணி வழங்க வேண்டும் என தெரிவித்து பேராதனை சந்தியில் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பெருந்தோட்ட சமுக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் கண்டி மாவட்ட அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எல்கடுவ தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட தோட்ட மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக தமக்கான ஊழியர் சேமலாப நிதியம் இதுவரை செலுத்தப்படாது தோட்ட நிர்வாகம் தம்மை ஏமாற்றி வருவதாக பெருந்தோட்ட சமுக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் கணேசலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட மக்கள் பல வருடங்களாக அங்கு தொழில் புரிந்து தோட்டங்களை கட்டிக்காத்து வரும் நிலையில், பராமரிக்கப்படாத தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை நாம் எதிர்க்கின்றோம்.

பல காலமாக இந்த தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லை, ஊழியர் சேமலாபா நிதி சில வருடங்களாக செலுத்தப்படவில்லை. அத்துடன் தோட்டம் நட்டத்தில் இயங்குவதாக தெரிவித்து தொழிலாளர்களுக்கு போதிய வேலையும் வழங்கப்படுவதில்லை, இத்தகைய செயட்பாடுகளை கண்டித்தே இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளும்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர எமது தோட்ட தொழிலாளர்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர். எனவே தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பெருந்தோட்ட சமுக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் கணேசலிங்கம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435