ஊழியர் சேமலாப நிதிய உரிமையாளர்கள் கவனத்திற்கு

ஊழியர் சேமலாப நிதியத்தில் பணத்தைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள பிரதேச தொழில் திணைக்கள அலுவலகங்களிலேயே பெற்று, சேவை வழங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பி.கே. பிரபாத் சந்தரகீர்த்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்புக் கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு நீங்கள் வருகைத் தருவதற்கான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண நிதியம் – 0112368904, 0112368911, 0112368490
30 % நிதியம் – 0112368252, 0112501249
மேலும் மிக அருகில் உள்ள தொழில் திணைக்கள அலுவலக தொலைபேசி இலக்கத்தை பெற www.labourdept.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிக்குமாறும் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435