ஊழியர் நம்பிக்கை, சேமலாப நிதியம் திரைசேரிக்கு கீழ் கொண்டுவர திட்டம்

தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேம லாப நிதியம் ஆகிய இரண்டையும் திரைசேரிக்கு கீழ் கொண்டு வருவதற்கான பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழில் அமைச்சர் டப்ளியு. டி. ஜே செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேம லாப நிதியம் ஆகிய இரண்டையும் திரைசேரிக்கு கீழ் கொண்டு வந்ததன் பின்னர் தனியார் ஓய்வூதிய முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கான பிரேரணை குறித்து தற்போது அரசாங்கம் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது.

அரச ஊழியர்களுக்கு பிரேரிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தையொத்த திட்டத்தை தனியார் துறையினருக்கும் முன்னெடுப்பதற்கு இப்பிரேரணையில் முன்மொழியப்பட்டுள்ளது.

தனியார்துறையினருக்காக அவர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவாக நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். அந்த நிதியத்தின் அங்கமாக ஊழியர் நம்பிக்கை நிதிய பங்காளர்களுக்கு வீடமைப்புக் கடன்களை பெற முடியும்.

ஆனால் வீடமைப்புக்காக வழங்கப்படும் கடன் தொகையை தற்போது போல 70 வீதமாக அன்றி 30 வீதமாக குறைக்கப்படும். குறிப்பிட்ட ஊழியர் ஓய்வுபெறும் போது போதுமான ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

கலந்துரையாடல்கள் பூர்த்தியானதும் மேற்படி பிரேரணையை ஒரு சட்டமூலமாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. இலங்கையின் மிகவும் பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாகவுள்ள ஊழியர் சேமலாப நிதியமானது கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய 1665 பில்லியன் ரூபா சொத்துக்களை கொண்டுள்ளது. தற்போது அந்த நிதியம் மத்திய வங்கிலுள்ள ஒரு பிரிவால் முகாமை செய்யப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திட்டத்தின் கீழ் தனியார் துறையினர் தமது விருப்பத்தின் பிரகாரம் ஓய்வு பெறுவதற்கான வயது தொடர்பில் நிலையான தெரிவொன்றை வழங்க வேண்டியிருக்கும். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றில் பெறும் இலாபங்களை அதிகரிப்பதற்கு பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், ஓய்வு பெற்ற பின்னர் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை படிமுறைகளின் விடுவிப்பது குறித்த பிறிதொரு மாதிரி ஆய்வு முன்னெடுக்கப்படுவதாகவும் நிதியமைச்சின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதியமானது, கடந்த வருட இறுதியிலான தரவுகளின் பிரகாரம் 2.3 மில்லியன் ரூபாவை சொத்தாக கொண்டுள்ளது. இந்த நிதியம் பிரதமரின் கீழ் செயற்படும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சால் முகாமை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்கமும் தனியார்துறை ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான பிரேரணையொன்றை முன்வைத்திருந்தது. எனினும் இத்திட்டத்தினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பன பாதிக்கப்படும் என்று என்று சுட்டிக்காட்டிய தொழிற்சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435