லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரிக்கு பத்தாண்டு சிறை

அனுராதபுரம் தொழில் திணைக்கள அதிகாரி 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டமை நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க பத்தாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர் ஒருவரிடம் குறித்த தொழில் திணைக்கள அதிகாரி 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டார் என நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேக்கரியில் கடமையாற்றிய பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி செலுத்தாமை தொடர்பில் வழக்குத் தொடர்வதனை தவிர்ப்பதற்கு 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டுள்ளார்.

கையூட்டல் பெற்றுக் கொண்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து அவ்வதிகாரிக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும் 40000 ரூபா அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

அனுராதபுரம் தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய சரத் பிரேமசந்திர என்ற அதிகாரிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435