இலங்கையில் ஓய்வு பெறுவோருக்காக வழங்கப்படும் நிதியங்களில் அதிக தொகையான நிதி ஊழியர் நம்பிக்கை நிதியத்திலேயே காணப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு நிறைவில் அந்நிதியத்தின் மொத்த தொகை 2 ட்ரில்யன்கள் ரூபாவையும் (ரூபா 2,000,000,000,000.00) தாண்டியுள்ளது ஆகும்.
‘எதிர்கால நோக்கு 2018’ நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டு காலத்திற்கும் 13 வீதத்தினால் இத்தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் இது மிக முக்கியமான திருப்பமுனையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்கத்துவ நிதியத்தை விரைவில் அறவிடல், அங்கத்துவ கணக்குகளை தற்காலிகமாக புதுப்பித்தல் மற்றும் நன்மைகளை வழங்குவதை விரைவுபடுத்தல் என்பவற்றினூடாக 2017ம் ஆண்டு நிதியத்தின் செயற்பாடு மிக செயற்றிறன் மிக்கதாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு இலத்திரனியல் ஊடகத்தினூடாக அங்கத்துவப்பணத்தை செலுத்துதல மற்றும் அங்கத்துவர் தகவல்களை வழங்குதல் என்பன கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும் நிதிய முகாமைத்துவத்திற்கான நிருவாக கட்டமைப்பு குறித்து மேலும் கவனம் செலுத்தும் பொருட்டும் நிதிய முதலீட்டு பொறுப்பு மற்றும் ஒழுக்க விதிமுறைகளை மேம்படுத்துவதற்கு சுயாதீனமான மற்றும் உள்ள கண்காணிப்பு முகாமைத்துவ திணைக்களமொன்றும் கடந்த வருடம் நிருவப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.