
தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய நிறுவனமொன்று கட்டார் நீதிமன்றம் 20,000 கட்டார் ரியால் அபராதமாக விதித்துள்ளது.
பணியாற்றும் இடத்தில் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக சில தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகியதையடுத்து கட்டார் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
சுமார் மூன்று மீற்றர் ஆழ குளியொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது மேலிருந்து மண் சரிந்து விழுந்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக குறித்த அபராதத் தொகையை விதித்து கட்டார் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கட்டார் டே இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.