இவ்வாண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஊவா மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் நூறு பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (24) நடைபெற்ற ஊவா மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
இன மத மொழி பேதமின்றி அனைத்து சமூகத்தினரும் கல்வியில் அபிவிருத்தியடைய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மேம்பாட்டுக்குள்ள தடைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நான் முதலமைச்சராக தெரிவாகிய பின்னர் இதுவரை மூவாயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இதனால் மாகாண கல்வி நிலையும் மேம்பட்டுள்ளது.
அதேபோன்று, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.