6ஆவது நாளாக ரயில்வே போராட்டம் இன்று அமைச்சரவையில் விசேட பத்திரம்

சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை தொடருந்து பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் மனுர பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்புகள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (30) நிதி அமைச்சில் கலந்துரையாடல் நடத்தின.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்ய இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை தொடருந்து பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீர்வு எவையும் முன்வைக்கப்படவில்லை என்ற காரணத்தினால் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு ரயில்வே சங்கங்கள் ஆரம்பித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

ரயில்வே சங்க பணிக்கணிப்பு காரணமாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பதற்காக 50இற்கும் மேற்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பேருந்துகள் குருநாகல், காலி, மாத்தறை, அளுத்கம மற்றும் மொரட்டுல முதலான பேருந்து சாலை நிலையங்களில் அதிகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435