எச்ஐவி தொற்றுக்குள்ளானோர் இலங்கையில் 10 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கையில் எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பால்வினை நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கடந்த 9 மாத காலத்துக்குள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 9 மாத காலத்துக்குள் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 170 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானர்வகள் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களாவர். எச்.ஐ.வி தொற்று தொடர்பில் பரிசோதனை செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்ககை அதிகரித்துள்ளது.

நடமாடும் வைத்திய முகாம்கள் மற்றும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகலாம் என்று சந்தேகிக்கப்படும் சமூகப்பிரிவுகளில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொழிலை மேற்கொள்ளும் பெண்கள், ஆண்கள், ஓரின சேர்க்கையாளர்கள், போதை பொருள் பயன்படுத்துவோர் இவ்வாறு அதிகளவு எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435