வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புக- தொழில் திணைக்களம்

பொதுச் சேவை தொழிலாளர் அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை நிறுத்தி விட்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் உட்பட அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.டி.சீ. அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் ஊழியர்களின் சேவை ஒப்பந்தம் உட்பட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன அனுமதி வழங்கியுள்ள போதிலும் வேலைநிறுத்தம் தொடர்வதானது நியாயமற்ற செயல் என்று ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும் திணைக்களத்தில் உள்ள 2500 ஊழியர்களில் 350 பேர் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கை எவ்விதமான பாதிப்புமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்/ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435