தமது சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அரச நிர்வாகசேவை தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தினர் நாளை (18) தொடக்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளது.
இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் 17 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச நிர்வாகசேவை தொழில்வாண்மையாளர் சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் கே.எல்.டி ரிச்மண்ட் ஊடகவியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.