தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிலுநர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை நாட்டில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில்
இடம்பெறவுள்ளது என்று அட்டாளைச் சேனை தேசியகல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த தினங்களில் விசேட கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய துறைகளில் கற்றலை மேற்கொள்ளவுள்ள பயிலுநர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கணிதம், விஞ்ஞானம், ஆரம்ப கல்வி உள்ளிட்ட 220 துறைகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் கடந்த வருடம் 182 பயிலுநர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என்றும் இம்முறை அவ்வெண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வருடங்களில் வர்த்தகப்பிரிவு தடை செய்யபபட்டமையினால் இவ்வருடம் அத்துறைக்கான கற்றல் எந்த கல்விக் கல்லூரியிலும் நடைபெறாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.