கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது அரசாங்க பிரதிநிதி நேரில் வந்து எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கினால் சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (31) தெரிவித்துள்ளனர்.
சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் நாட்கள் பூர்த்தியாகிய நிலையில் கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் எங்களுக்கு நேரடியாக உறுதிமொழி வழங்கப்படவில்லை. வெயில் மழை பாராமல் நாம் எமது உரிமைக்காக போராடி வருகிறோம். இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது அரசாங்க பிரதிநிதியோ எழுத்து மூலமான உறுதிமொழியை நாம் சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிடுவோம்.
அரச நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறினாலும் எப்போது வழங்கப்படும் என்று இது வரை உறுதியாக கூறப்படவில்லை. அதனை எழுத்து மூலமாக வழங்கினால் நாம் எமது போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.