ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி கையொப்பம் இட்டிருந்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது குறித்த வர்த்தமானி அடங்கிய பிரேரணைக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிரான 8 வாக்குகளும் அளிக்கப்பட்;டன.
இதற்கமைய, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.