ஏழாவது நாளாகவும் தொடரும் மின்சாரசபை ஊழியர்கள் போராட்டம்

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மின்சாரசபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (19) தொடர்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சாரசபை ஊழியர்கள் ஏழாவது நாளாக இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் தொழில்நுட்ப பொறியிலாளர்கள் சங்கம் மற்றும் மின் அத்தியட்சகர் சங்கம் என்பனவும் இணைந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நேற்று (18) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு இடம்பெற்றுள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பை ஏற்படுத்த பலர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் மின் பிறப்பாக்கிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435