முறையற்ற இடமாற்றங்களை இடைநிறுத்துக!

கிழக்கு மாகாண கல்வி நடவடிக்கையை சீர்குழைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2017ம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக பிற்போட நடவடிக்கைஎடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வித் துறைசார் தொழிற்சங்கங்கள் மாகாண கல்வியமைச்சிடம் கோரியுள்ளன.

வருட ஆரம்பத்தில் இடமாற்றம் வழங்கப்படுவது இயல்பானது, எனினும் வருடாந்த இடமாற்றம் என்ற போர்வையில், வருட இடைநடுவே கிழக்கு மாகாண கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள இடமாற்றமானது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான தேசிய கொள்ளைக்கு விரோதமாக நடைபெறுகிறது. இச்செயற்பாட்டால் பாடசாலைகளின் நாளாந்த கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. அதிபர்களின் நிருவாக செயற்பாட்டிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைபரிசில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற க.பொ.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் கிழக்கு மாகாணம் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கொள்கையொன்று வகுக்கப்படவில்லை. கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் தொடர்பான தகவல்கள் வௌியிடப்படவில்லை. ஏனைய மாகாணங்களில் கோரப்படுவது போன்று பகிரங்கமாக கோரப்படுவதில்லை. இவ்வாறு பல்வேறு குறைப்பாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கிழக்கு ஆசிரியர் இடமாற்றமானது இடைநிறுத்தப்பட்டு முறையான கொள்கையின் அடிப்படையில், இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்று அத்தொழிற்சங்கங்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435