பாரிய குற்றங்களாக கருதப்படும் 7 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 25,000 ரூபா வரையில் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று (21) போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை, சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், இடப்புறமாக முந்திச் செல்ல முற்படுதல், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு இடமளித்தல் ஆகிய ஏழு வகையான வீதி ஒழுங்கை மீறும் குற்றச்சாட்டுக்களுக்கே 25,000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.