ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று (02) 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதாக
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிப்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றுமொருவர் லங்காபுரயில் கொவிட் 19 தொற்றுறுதியானருவடன் தொடர்பை பேணியவராவார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,823 ஆக அதிகரித்துள்ளது.

75 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,514 ஆக அதிகரித்துள்ளது.

298 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்றிரவு 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட கொரோனா நிலவர அறிக்கை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435