பெப்ரவரி மாதம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கல்ப் நியுஸ் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு கடந்த 29ம் திகத அந்நாட்டு எரிசக்தி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில், கச்சா எண்ணெயின் விலை 55.52 அமெரிக்க டொலர்களினால் அதிகரித்துள்ளமையினால் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பதுன் சுப்பர் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 1.91 டிராம் தொடக்கம் 2.0 திர்ஹம் வரை அதிகரிக்கும் என்றும் 95 வகை பெற்றோலின் விலை லீற்றருக்கு 1.80 டிராம் முதல் 1.89 டிராம் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் ஒரு லீற்றரின் விலை 1.94 டிராம் தொடக்கம் 2.0 டிராம் வரை அதிகரிக்கும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் எரிசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.