ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூடுபனி

ஐக்கிய அரபு இராச்சிய மூடுபனி காணப்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அந்நாட்டு வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடர்த்தியான மூடுபனி காரணமாக 1000 மீற்றர் வரை வீதிகள் மறைக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எனவே வாகன சாரதிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் இந்நிலை அதிகமாக காணப்படுவதாகவும் படிப்படியாக பகல் நேரத்தில் இந்நிலை குறைவடையும் என்றும் இந்நிலை நாளை வரை தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

கடற்கரை பிரதேசங்களிலும் உட்பிரதேசங்களிலும் இந்நிலை அதிகமாக காணப்படும் என்று எச்சரித்துள்ள வானிலை அவதானநிலையம் எதிர்வரும் இருநாட்கள் கடுங்குளிரான காலநிலையை உணரலாம் என்றும் வடக்காகவும் தெற்காகவும் தூசு மணலுடன் கூடிய காற்று வீசும் சாத்தியங்களும் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

மேலும், தீவுப்பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அரபிக்கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி- கல்ப் நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435