புழுதிப்புயல், மந்தமான காலநிலை நாளை (16) வரை தொடர்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதானநிலையம் எச்சரித்துளள்து.
புழுதிப்புயல் காரணமாக வீதிகள் தெளிவாக தெரிவதில் சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதான நிலையம் இதனால் அப்பிரதேசவாசிகளை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
காலநிலை மிக மோசமாக காணப்படும் சந்தர்ப்பங்களை வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுக்களிடம் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது. குறிப்பாக புழுதி அலர்ச்சியுள்ளவர்கள் மற்றும் ஆஸ்த்துமா நோயாளர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை புழுதிப்புயல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் அனைத்து விமானசேவைகளும் இதனால் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது