பத்து இலட்சம் வேலை திட்டத்தின் கீழ் எதிர்வரும் காலங்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சியாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NITA) தலைவர் கலாநிதி சானக்க அத்துகோரள தெரிவித்துள்ளார்.
45 வருட பூர்த்தியை கொண்டாடும் நைட்டா நிறுவனத்தின் புதிய குறிக்கோளாக இவ்வாறு ஐம்பதாயிரம் பயிற்சி பெற்ற ஊழியர்கள் உருவாக்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பயிற்சி வழங்குவதே எமது நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்.இலங்கையின் 12,000 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி திட்டத்தின் கீழ் 24 துறைகளில 30,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 162 பயிற்சி நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நைட்டா நிறுவனத்தினால் உருவாக்கப்படும் தொழிற்பயிற்சியாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கி சுயதொழில்களை ஆரம்பிம்பதற்கான கடனுதவிகளை வழங்கவும் நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.
45 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இந்நிறுவனத்தின் அபிவிருத்திக்கு துறைசார் அமைச்சர் மஹிந்த அமரசிங்க, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரா ஆகியோரின் வழிகாட்டலில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.