அண்மையில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாவினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், தொழில் ஆணையாளர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிலுவையை மீளச் செலுத்தாமை, தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்தாமை மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு விடயங்கள் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தாமை உள்ளிட்ட பல விடயங்கள் இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.