இன்று (04) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
ஓக்டோபர் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது என போலியான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்ப்பட்டுள்ளது.