ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கற்றல் நடவடிக்கை சமூக பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளமையினால் முற்றாக தோல்வியடைந்துள்ளது. என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பல ஆசிரியர்களும் பெற்றோரும் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள் அல்ல. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வலையமைப்பு சிக்னல் மிகவும் குறைவாகவே உள்ளது. அத்தோடு அவற்றுக்கான செலவு மிகவும் அதிகம் என்பதுடன் போதுமானதாகவும் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 30 வீதமானவர்களும் மேல் மாகாணத்தில் உள்ள 50 வீதமானவர்களும் 20 -40 வீதமான ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களும் மட்டுமே இவ்வசதியை கொண்டுள்ளனர். ஏனையவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை.
தற்போதைய கொவிட் 19 தொற்று நிலை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் சிறந்த தொலைகல்வி முறையானது தொலைகாட்சியினூடாக வழங்குவது மட்டுமே
அத்துடன் ஒன்லைன் கல்விமுறையானது பிள்ளைகளுக்கு மேலதிக அழுத்தங்களை வழங்குதுடன் கையடக்க தொலைபேசி, கணனி என்பவற்றுக்கு அதிகமாக அடிமையாக்குகிறது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இணையதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.