இந்த வருடம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (Sri Lankan Apparel Exporters Association – SLAEA) தலைவர் ரெஹான் லகானி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 மாத காலத்திற்கு ஆடைத்தொழிற்சாலைகளுக்கு எவ்வித உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசாங்கம் வழங்கியுள்ள 50 பில்லியன் (250 மில். அமெ.டொலர்) நிவாரணமானது தேவைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம் – Fibre2Fashion