ஒரு இலட்சம் ஆசிரியர்களின் பதவியுயர்வில் தேக்கநிலை

ஆசிரியர்களுக்கான பதவியுயர்வுக்கான செயற்பாடுகளை கடந்த மூன்று வருடங்களாக கல்வியமைச்சு முன்னெடுக்காமையினால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கான பதவியுயர்வுகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை யாப்பு கடந்த 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி மாற்றப்பட்டு புதிய யாப்பு வர்த்தமானி அறிவித்தலினூடாக வௌியிடப்பட்டது. புதிய யாப்பு வௌியிடப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பதவியுயர்வு வழங்கப்பட்டு நிலுவைச் சம்பளம் வழங்கப்படவில்லை.

ஆசிரியர் சேவை யாப்புக்கமைய பதவியுயர்வு வழங்கும் போது செயற்றிறன் மதிப்பீட்டுக்காக 20 மொடியூல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும்.

மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குறித்த மொடியூல்கள் அச்சிடப்பட்டு செயற்படுத்துவதற்கான செயற்றிட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் கடந்த 23ம் திகதி தொடக்கம் பதவியுயர்வுகள் நிறுத்தப்பட்டு பிரச்சினைக்குரிய நிலைமையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் புதிய யாப்பின் சட்டவிதிகளுக்கான கால எல்லையை நீடிக்குமாறும் மூன்று வருடங்களுக்கு மேலாக உரிய மொடியூல் தயாரிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து பார்க்குமாறும் கல்வியமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435