நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இம்மாதம் ஆறாம் திகதி வரை நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புக்களிலேயே இவ்வர்த்தகர்களிடம் அபராதப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.
கொழும்பில் மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான அபராதப்பணம் அறிவிடப்பட்டுள்ளது என்றும் கண்டியில் 4.3 மில்லியன் ரூபாவும் குருநாகல் மாவட்டத்தில் 3.6 மில்லியன் ரூபாவும் அபராதமாக அறிவிடப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வேலைத்தளம்