
குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (26) முதல் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோரின் பெயர் விபரம் ஜனாதிபதி காரியாலயத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம்