பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை விடுக்கும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பொறுப்பான பதில் கிடைக்காவிடின் நவம்பர் 8ம் தகிதி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கல்வியமைச்சு மற்றும் தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழு என்பன உறுதியளித்தது போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பொறுப்பான பதில் கிடைக்காவிடின் இவ்வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வொன்றியத்தின் அமைப்பாளர் எம்.ஜே.எஸ் டி சேரம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 22 வருடங்களாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நிலவி வருகிறது. இந்நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சு மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு என்பன இறுதியில் இணக்கம் தெரிவித்து அது வரையில் இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் சரியான அளவு சம்பளம் கிடைக்காவிடின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஈடுபடுவோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435