வறுமைக் கோட்டின் கீழுள்ள ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் திட்டம் எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
தொழில்வாய்ப்பை பெறுவதற்கு பணமாகவோ வேறு வகையிலோ லஞ்சம் வழங்க முற்படும் நபர் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைசார் கல்வி பெறாத, வறுமைக் கோட்டின் கீழுள்ள இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் நோக்கில் இத்தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தொழில்வாய்ப்பினை வழங்கும் பணிகளை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி படையணி முன்னெடுக்கும்.
தொழில் வாய்ப்பை பெறுவதற்கான தகுதிகள் வருமாறு…
க.பொ.த சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வி தகமையுடைய, முறைசார் கல்வியை பூர்த்தி செய்யாத பயிற்சி பெறாத 18 வயதுக்கு குறையாத, 40 வயதுக்கு மேற்படாத இளைஞர் யுவதிகளுக்கு இத்தொழில்வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சமுர்தி கொடுப்பனவை பெறும் தகுதியுடைய குடும்ப அங்கத்தினராக இருத்தல் அல்லது சமுர்தி கொடுப்பனவு பெறும் குடும்பத்தைச் சேர்ந்த தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் இவ்வாய்ப்பை பெற தகுதியுடையவர்களாவர்.
வயது முதிர்ந்த பெற்றோர், விசேட தேவையுடைய குடும்ப அங்கத்தினரையுடைய தொழிலற்ற இளைஞர் யுவதிகள்
விண்ணப்பித்துள்ள பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள்.
பயிற்சிக்கு தெரிவு செய்தல் முறை
மேற்கூறப்பட்ட தகமைகளையுடைய குடுபத்தி்ல் ஒருவர் இவ்வாய்ப்பை பெறுவார்.
தேவையான தொழில்பயிற்சி/ துறையினை விண்ணப்பதாரி தீர்மானிக்கலாம்.
விண்ணப்பதாரியின் பிரதேசத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் அல்லது அண்மையிலுள்ள பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும்.
இதற்கமைய, பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரி பிரதேசத்தில் அல்லது அண்மித்த பிரதேசத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும்
கொடுப்பனவு மற்றும் சம்பளம்
தொடர்ச்சியாக 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள் அவர்களுடைய பிரதேசத்திலேயே நிரந்தர அரச நியமனத்தை பெறுவார். அவர் அடிப்படை பயிற்சியற்ற சம்பளம் 35,000 ரூபா மற்றும் கொடுப்பனவு பெற தகுதியுடையவராவார்.
தொழில் திருப்தி மற்றும் தொடர்ச்சியாக 10 வருடங்கள் பணியாற்றினால் ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுவர்.
லஞ்சம் கொடுக்க முற்படுவர்கள் உடடியாகவே தொழில்வாய்ப்பை பெறும் தகுதியை இழப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத் தக்கது.
அரசாங்க தகவல் திணைக்களம்