மேல் மாகாணத்தில் இருந்து சொந்த இடங்களுக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்!

மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும் மாகாணத்தை விட்டு அவசரமாக வௌியேற முயற்சிக்க வேண்டாம் என்றும் இராணுவத தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் இன்று (28) மாலை வௌியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாளை (29) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது தற்காலிகமானது. எனவே பொது மக்கள் அச்சடைந்து சொந்த இடங்களுக்கு செல்ல முயற்சிக்கவோ பொருட்களை வாங்கிக்கொள்ள முண்டியடிக்கவோ தேவையில்லை.

மேல் மாகாணத்தில் அத்தியவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் எாலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும். பொது மக்கள் நடை தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நவம்பர் 2ம்திகதிக்கு பின்னரும் மீளறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு தொடரும். குறித்த பிரதேசங்களில் கிழமைக்கு 2 நாட்கள் அத்தியவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435