ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற புலம்பெயர் தொழிலாளர்

ஓமானில் பணியாற்றி வந்த இலங்கை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன என ஓமானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கல்பா என்ஜினியரிங் அண்ட் கண்ஸ்ரக்டிங் கம்பனியில் பணியாற்றி வந்த ருவந்திக்கா டிலானி என்ற பெண்ணுக்கு மஸ்கட்டில் உள்ள கொஹ்லா மருத்துவமனையில் சிக்கலான சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் அத்தாய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 அச்சம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பம் தெரிவித்திருந்தபோதிலும் முடக்கல் மற்றும் விமான நிலையம் மூடப்பட்டமை போன்ற காரணங்களினால் திரும்ப முடியாது போயிருந்தது. இதேநிலைமைக் காரணமாக ருவந்தி டிலானிக்கும் பிரசவத்திற்கு தாய்நாட்டுக்கு திரும்ப முடியாது போயிருந்தது.

பிரசவமும் சிக்கல் நிலையை எதிர்நோக்கியதையடுத்து சிரேஸ்ட ஆலோசகரும் பெண்ணியல் மருத்துவருமான டொக்டர் தாஹிரா கஸ்மி சத்திரசிகிச்சை மேற்கொண்டு தாயையும் மூன்று சேய்களையும் மீட்டுள்ளார். அவருக்கும் இலங்கை தூதரகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளது.

மேலும். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறையுடன் செயற்படும் அந்நாட்டு மன்னர் சுல்தான் ஹைத்தாம் பின் தாரிக் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும் ஓமானுக்கான இலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வட் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435