பயணிகள் பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (12) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வதிகரிப்பானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வதிகருப்புக்கமைய இதுவரை 8 ரூபாவாக இருந்த பஸ் கட்டணம் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 9 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. ஏனைய பஸ் கட்டண விபரங்களை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்படவிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்த கட்டண திருத்தத்திற்கு அமைவாக நிபுணர் குழுவினரால் அதிகரிப்பு வீதம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
3.2 வீதமாக பண்கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வைத்த யோசனையை பஸ் சங்கங்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்