விவசாயிகளுக்கு இலவச காப்புறுதி

விவசாயிகளிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடாமல் விவசாய காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

முதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச விவசாய காப்புறுதித் திட்டத்தை பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளை அடுத்தே இத் திட்டத்தை விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

செய்கைபண்ணப்படும் பயிர்களுக்கு அழிவு ஏற்படும் வேளைகளில் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட விவசாய காப்புறுதித் திட்டத்தினூடாக இதுவரை விவசாயிகள் வருடாந்தம் அங்கத்துவ கட்டணமாக 1,375 ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளின் படி விவசாயிகளிடமிருந்து அங்கத்துவ கட்டணம் எதுவும் அறவிடாமல் முழுமையான விவசாய காப்புறுதி ஒன்று வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி விவசாய காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபாவை இவ்வருடத்திற்கென அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. விவசாய காப்புறுதித் திட்டத்தினூடாக நெற் செய்கை, வெங்காயச் செய்கை, மிளகாய் செய்கை, சோளம் மற்றும் கிழங்குச் செய்கை போன்றவை உள்வாங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடனேயே இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள சிறு போகத்திற்காக விவசாய காப்புறுதிப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு 28ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

வேலைத்தளம்/ நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435