எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி 16,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில மாதங்களில் 5000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் குறித்த நியமன வழங்கல்களின்போது 75% உள்வாரி பட்டதாரிகளையும், 25% வெளிவாரி பட்டதாரிகளையும் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.