ஓமானில் வேலையிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்

ஓமானின் தகவல் மற்றும் குடித்தொகை மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கமைய அந்நாட்டு தனியார் துறையில் பணியாற்றும் வௌிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

அண்மைக்காலமாக அந்நாடு பின்பற்றும் தொழில்வாய்ப்பை குறைக்கும் நடவடிக்கை காரணமாகவே வௌிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

அந்நாட்டு தனியார் துறை வேலைவாய்ப்புக்களில் வௌிநாட்டவர்களை விடவும் உள்நாட்டவரை இணைத்துக்கொள்ளும் நோக்கிலேயே வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் காலாண்டில் முகாமைத்துவ வேலைவாய்ப்பில் 3 வீதமான வீழ்ச்சி காணப்படுகிறது. எதிர்வரும் 5 வருடங்களில் தனியார் துறையில் உயர் வேலைவாய்ப்பில் 40 வீதமானவையில் ஓமான் நாட்டவரை நியமிக்கவேண்டும் என்று அந்நாட்டு ஷூரா கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஓமான் சனத்தொகையில் 45.5 வீதமானவர்கள் வௌிநாட்டவர்களாவர். இவர்கள் கட்டுமானத்துறை சேவை மற்று பொறியியல் துறைகளில் அதிகமாக பணியாற்றுகின்றனர். எனினும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது ஓமானில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளமையினால் இவ்வேலைக்குறைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இதற்கு தாக்கம் செலுத்துகிறது.

 

வேலைத்தளம்

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435